எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் - கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார்
கோவை, 22 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு முழுவதும் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், குறிப்பிட்ட தொகுதிகளில் கூடுதல் குழுக்கள் நியமிக்கப்பட்ட
க


கோவை, 22 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு முழுவதும் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்பொழுது பேசிய அவர்,

குறிப்பிட்ட தொகுதிகளில் கூடுதல் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அனைத்து புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது 182 பதற்றமான வாக்கு சாவடிகளை கண்டறிந்து மத்திய பாதுகாப்பு படையினரை நியமித்துள்ளோம்.

தேர்தல் விதி மீறல்கள் குறித்து வேட்பாளர்கள் வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளரின் புகார் குறித்தான கேள்விக்கு எந்த புகார்கள் வந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் CSR FIR பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

வெளி மாவட்ட நபர்கள் யாரெல்லாம் தங்கி இருக்கிறார்கள். என்று காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு 48 மணி நேர SOP யை எடுத்து வருகிறோம்.

கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு போதிய காவல்துறையினரை நியமித்துள்ளோம். அதற்கான திட்டமிடலும் செய்துள்ளோம். எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். என்றார்.

தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்கவில்லை.

Hindusthan Samachar / ANANDHAN