Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 22 ஏப்ரல் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
பிரச்சாரம் நிறைவடைந்து, நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வேப்பூரில் உள்ள தேமுதிக அலுவலகத்தை 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு, கூட்டணி கட்சிகள் தங்களை மதிப்பதில்லை என்றும், தேர்தல் செலவுக்கான நிதி வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
மேலும், மாவட்ட நிர்வாகத்திலும் தங்களுக்கு உரிய மரியாதை இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சமாதான பேச்சுவார்த்தைக்காக வந்த திமுக ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமியுடனும் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தாமே தனிப்பட்ட முறையில் நிதி வழங்கியதாக கோவிந்தசாமி கூறியதும் சூழ்நிலை மேலும் சூடுபிடித்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த முற்றுகை மற்றும் வாக்குவாதம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam