வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட குக்கர்கள் - தேர்தல் பறக்கும் படை பறிமுதல்
கரூர், 22 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அறிவிக்கப்பட் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும். நாளை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்
Cookers Intended for Distribution


கரூர், 22 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அறிவிக்கப்பட் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும்.

நாளை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதோடு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புலியூர் பகுதியில் வாக்காளர்களுக்குக் குக்கர் வழங்கப்படுவதாகத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர் அப்பகுதிக்குச் சென்றனர். அப்போது அதிமுக வேட்பாளர் திவ்யாவிற்கு ஆதரவாகச் சிலர் வீடு வீடாகச் சென்று குக்கர் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அச்சமயத்தில் அவர்கள் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வருவதைக் கவனித்த உடன் அங்கிருந்த குக்கரை அருகில் உள்ள தோட்டத்து குடோனுக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து தோட்டத்திற்குள் சென்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் 52 குக்கர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 52 குக்கர்களையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Hindusthan Samachar / vidya.b