மளிகை கடை பூட்டை உடைத்து ரூ 1 லட்சம் திருட்டு - ஆதார் அட்டைகள் தீயிட்டு எரிப்பு
திண்டுக்கல், 22 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் கிராமம் சுக்காம்பட்டியில் குமரவேல் என்பவர் சித்தமரம் நால்ரோடு - கோட்டூர் செல்லும் சாலையோரம் மளிகைகடை வைத்துள்ளார். நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் ம
Theft


திண்டுக்கல், 22 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் கிராமம் சுக்காம்பட்டியில் குமரவேல் என்பவர் சித்தமரம் நால்ரோடு - கோட்டூர் செல்லும் சாலையோரம்

மளிகைகடை வைத்துள்ளார்.

நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் மளிகை கடையை பூட்டிவிட்டு, தனது வீடு உள்ள சுக்காம்பட்டிக்கு சென்று தூங்கிவிட்டு இன்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் இரண்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது சில நாட்களாக வியாபாரம் ஆன கல்லாப்பெட்டியில் இருந்த ரூ 1 லட்சம் படம் திருடப்பட்டும், மேலும் அங்கிருந்த வியாபாரி குமரவேலின் குடும்பத்தினர் ஆதார் அட்டைகளில் தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து குமரவேல் வேடசந்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்கு பதிவு செய்து போலீசார் சம்பவ இடத்துக்கு வரிந்து சென்று அந்தப் பகுதியில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

வியாபாரி குமரவேல் மளிகை கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிக் கொண்டும், அங்கிருந்த ஆதார் அட்டைகளை தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றனர்.

மளிகை கடையில் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது

Hindusthan Samachar / ANANDHAN