Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 22 ஏப்ரல் (ஹி.ச)
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியருமான கந்தசாமி செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு சாவடி அலுவலருக்கான மூன்றாம் கட்ட பயிற்சி நடைபெற்று வருகிறது.
ஒரு பக்கம் இறுதி கட்ட பயிற்சி அதே நேரத்தில் வாக்கு மையத்திற்கு தேவையான இயந்திரங்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
எட்டு சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையம் எளிதில் கண்டு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 2379 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு மையங்களில் வாக்குப்பதிவு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட செயலி மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை நடைபெற உள்ள தேர்தலுக்கு அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், பாதுகாப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் அணுகக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பண பட்டுவாடா குறித்த கேள்விக்கு எக்ஸ்பென்ஸி அப்சர்வர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மலை கிராமங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN