Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 22 ஏப்ரல் (ஹி.ச.)
இந்தியன் பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதிய போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு அபிஷேக் ஷர்மா அதிரடி துவக்கம் கொடுத்தார். அவருடன் இணைந்த டெராவிஸ் ஹெட் 26 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன் 13 பந்துகளில் 25 ரன்களும், ஹென்றிச் 13 பந்துகளில் 37 ரன்களும் குவித்து அணியின் ரன் வேகத்தை அதிகரித்தனர்.
சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 68 பந்துகளில் 135 ரன்கள் (10 பவுண்டரி, 10 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது.
பின்னர் 243 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. பத்தும் நிசங்க 8 ரன்களில் அவுட் ஆனார்.
தொடர்ந்து கே எல் ராகுல் 23 பந்துகளில் 37 ரன்களும், நித்திஷ் ராணா 2 பந்துகளில் 57 ரன்களும் எடுத்தாலும் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய இஷான் மலிங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஹரிஷ் டுபே 3 விக்கெட்டுகளும், தில்ஷான் மதுஷங்க மற்றும் சாகிப் உசைன் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA