Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீநகர் , 22 ஏப்ரல் (ஹி.ச.)
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே நாளில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பஹல்காம் தாக்குதலுக்கு ஓராண்டு ஆன பின்னரும் அதன் வேதனை குறையவில்லை.
பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உறுதியாக நிற்கிறோம்.
ஜம்மு-காஷ்மீரை துன்பங்களிலிருந்தும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளிலிருந்தும் பாதுகாக்கும் நோக்கில் நாங்கள் உறுதியுடன் செயல்படுகிறோம்.
இதுபோன்ற கொடூர சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
அந்த கோழைத்தனமான தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் எப்போதும் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம்.
உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA