Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 ஏப்ரல் (ஹி.ச.)
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில்
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது.
இதற்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் நடைபெற்றதற்கு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி, தனது
‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில்,
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்கிறேன். அவர்கள் ஒருபோதும் மறக்கப்படமாட்டார்கள்.
அவர்களின் குடும்பங்களுடன் நாடு முழுவதும் மக்கள் துணை நிற்கின்றனர். இந்த துயரத்தில் நாடு ஒன்றுபட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது; பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றி பெறாது என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA