Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 ஏப்ரல் (ஹி.ச.)
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக கிடைத்துள்ள முதற்கட்ட தகவலின்படி, வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள பூரம் திருவிழாவிற்காக கொட்டகையில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் கடும் வெப்பத்தால் திடீரென வெடித்து சிதறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்து ஏற்பட்டதும் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்சூர் பட்டாசு ஆலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA