கிருஷ்ணகிரியில் கோர விபத்து - 3 பேர் பலி
கிருஷ்ணகிரி, 22 ஏப்ரல் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று காலையில் ஆம்னி பஸ் ஒன்று உளுந்தூர்பேட்டையில் இருந்து பயணிகளுடன் பெங்களூர் சென்று கொண்டிருந்தது. ஓசூர் அருகே சானமாவு பகுதியில் சென்றபோது ஆம்னி பஸ்சும் எதிர்த்திசையில் வந்த கார்
விபத்து


கிருஷ்ணகிரி, 22 ஏப்ரல் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று காலையில் ஆம்னி பஸ் ஒன்று உளுந்தூர்பேட்டையில் இருந்து பயணிகளுடன் பெங்களூர் சென்று கொண்டிருந்தது.

ஓசூர் அருகே சானமாவு பகுதியில் சென்றபோது ஆம்னி பஸ்சும் எதிர்த்திசையில் வந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது.

காரில் இருந்தவர்கள் படுகாயமடைந்து அபாயக்குரல் எழுப்பினர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார் கார் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரில் வந்தவர்கள் தர்மபுரியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதில்,தர்மபுரி மாவட்டம் சிகரள அள்ளி கிராமத்தை சேர்ந்த வீரமணி, பிரதாப் மற்றும் மாரி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர் என்றும் சதீஷ் குமார் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு ஓட்டு போடுவதற்காக வந்ததாக கூறப்படுகிறது.

பொன்னகரம் நோக்கி வந்துகொண்டிருந்த போது தான் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P