Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 ஏப்ரல் (ஹி.ச.)
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக நான்காம் நாள் விழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
இன்று காலை அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க பல்லக்கில் எழுந்தருளி, கோவிலின் தெற்கு வாசல் வழியாக வில்லாபுரம் பகுதியில் அமைந்துள்ள பாகற்காய் மண்டகப்படி நோக்கி புறப்பட்டார்.
வீதியெங்கும் திரண்டிருந்த பக்தர்கள், சுவாமியை தரிசிக்க ஆவலுடன் காத்திருந்து பக்திபூர்வமாக வழிபட்டனர்.
மாலை 6 மணிக்கு மேல் மின்னொளி அலங்காரத்துடன் தங்க பல்லக்கில் அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மீண்டும் கோவிலை நோக்கி புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதி உலா நிகழ்ச்சி பக்தர்களை பெரிதும் கவர்ந்தது.
தெற்கு ஆவணி மூல வீதி வழியாக சென்றபோது, மதுரை ஆதீனம் மரியாதை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தார்.
சித்திரை திருவிழாவின் ஒவ்வொரு நாளும் நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள் மதுரையில் களைகட்டி வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P