Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 22 ஏப்ரல் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் முதுமலை மசினகுடி வனக்கோட்டத்திற்குட்பட்ட தெங்குமரஹாடா காப்புக்காடு கூக்கல்தொரை ஹல்லா உப்பு மண் குழி பகுதியில் வனப்பணியாளர்கள் ரோந்து செல்லும் போது பெண் யானை இறந்ததை பார்த்துள்ளனர் .
இதனையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மசினகுடி துணை இயக்குனர், வன கால்நடை மருத்துவர் , உப்பட வனச்சரகர்கள் தலைமையில் BCT தன்னார்வலர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது .
அதில் இறந்த பெண் யானைக்கு சுமார் 47 வயது எனவும், கருவுற்றிருந்த யானை பேரு காலத்தில் ஏற்பட்ட குட்டி ஈனுதல் தொடர்பான பாதிப்பினால் யானை இறந்திருக்கலாம் எனவும் ஆய்வகத்திற்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதன் முடிவுகள் வந்த பின்னரே உறுதியாக யானை இறப்பிற்கான முழு காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN