32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டுபிடிப்பு - நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா தண்ணீரு
நீலகிரி, 22 ஏப்ரல் (ஹி.ச.) நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 736 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.83 மண்டல குழுக்கள் ம
Lakshmi Bhavya Thaneeru


நீலகிரி, 22 ஏப்ரல் (ஹி.ச.)

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 736 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.83 மண்டல குழுக்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு உபகரணங்கள் எடுத்து செல்லப்படுகிறது.

தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரூ இப்பணியினை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் 736 வாக்குச்சாவடிகளில் 32 வாக்கு சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது.

வனப்பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் தேர்தல் பணியாளர்களுக்கு அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறையினர் துணையுடன் அனுப்பிவைப்பதுடன் அவர்கள் தங்குமிடங்களில் மனித வனவிலங்கு மோதல் ஏற்படாமல் இருக்க ஆயுதம் ஏந்திய வனத்துறையினரின் பாதுகாப்பு அளிக்கப்படும்.

வாகன வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகராட்சிக்ககுட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு, குடி தண்ணீர் , சர்க்கர நாற்காலி போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாகன வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN