Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 22 ஏப்ரல் (ஹி.ச)
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி ,
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
பெரம்பலூர் மாவட்டத்தில் 147. பெரம்பலூர்(தனி) மற்றும் 148. குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 732 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 345 வாக்குச்சாவடி மையங்களும் தயார் நிலையில் உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மற்றும் வயது முதிர்ந்த வாக்காளர்கள் எளிதில் சென்று வர சாய்தள வசதிகள், சக்கர நாற்காலிகள், உதவியாளர்கள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வெயில் காலம் என்பதால், வாக்குச்சாவடி மையங்களில் குடிநீருடன் ஓ.ஆர்.எஸ். கரைசல் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் பகுதியில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாள் அன்று தேர்தல் பணியில் 3,512 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
பாதுகாப்பு பணியில் 840 காவலர்கள், இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்புப்படையினர் 176 நபர்களும், ஊர்க்காவல் படையினர் 215 நபர்களும், முன்னாள் இராணுவத்தினர் – சிறைத்துறையினர், தீயணைப்புத்துறையினர் என மொத்தம் 1,246 நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN