திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
புதுக்கோட்டை, 22 ஏப்ரல் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராம கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி -பாப்பாத்தி இவர்களின் மகள் போதும்பொண்ணு (18)நேற்றைய தினம் கம்பெனிக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தபோது வலுகட்டாயமாக கடத்த
போராட்டம்


புதுக்கோட்டை, 22 ஏப்ரல் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராம கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி -பாப்பாத்தி இவர்களின் மகள் போதும்பொண்ணு (18)நேற்றைய தினம் கம்பெனிக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தபோது வலுகட்டாயமாக கடத்தி சென்றுள்ளனர்.

இதையடுத்து ஊர் பொதுமக்கள் காரின் நம்பரை வைத்துக்கொண்டு காரின் உரிமையாளரை தொடர்பு கொண்டு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து உரிமையாளர்களிடம் விசாரிக்கும் போது, என்னுடைய காரை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் இது பற்றி அந்த வாகன ஓட்டுனரிடம் தொடர்பு கொள்ளும்போது தற்போது வரை தொடர்பு கொள்ளாமல் சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார்.

தொடர்ந்து காவல்துறையினர் அலட்சியம் கட்டும் பெறும் நிலையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்ட அந்த ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறையினர் அந்தப் பெண்ணை கண்டுபிடித்து தரும் வரை இந்த இடத்தை விட்டு நகர விடமாட்டோம் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam