செய்யார் சிறுமி கூட்டு பலாத்காரம் - தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை
திருவண்ணாமலை ,22 ஏப்ரல் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் 15 வயது சிறுமி மீது நடைபெற்றதாக கூறப்படும் கூட்டு பலாத்காரம் சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து (Suo motu) விசாரணை தொடங்கியுள்ளது. இச்சம்பவம் இளம் பெண்களின் பாது
Gh


திருவண்ணாமலை ,22 ஏப்ரல் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் 15 வயது சிறுமி மீது நடைபெற்றதாக கூறப்படும் கூட்டு பலாத்காரம் சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து (Suo motu) விசாரணை தொடங்கியுள்ளது.

இச்சம்பவம் இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

சிறுமிகளுக்கு எதிரான வன்முறை மனித உரிமைகளின் மிகப்பெரிய மீறலாகும் என்றும், இது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல், மன, உளவியல் ரீதியாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த கொடூரச் சம்பவத்தை ஆணையம் கடுமையாகக் கண்டித்ததுடன், உடனடி மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

இதனையடுத்து,

- பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்சோ சட்டம் கீழ் உடனடியாக FIR பதிவு செய்ய,

- குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவாக கைது செய்ய,

- காலவரையறைக்குட்பட்ட நியாயமான விசாரணை மேற்கொள்ள,

- பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவம், ஆலோசனை, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு உதவிகள் வழங்க

தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 5 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ