Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 22 ஏப்ரல் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி, போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை காலை நடைபெறுகின்றது.
இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய தொகுதிகளில் வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பதிவு மின்னணு இயந்திரங்கள், மற்றும் உபகரணங்கள் அனுப்பும் பணி துவங்கியது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் 7,35,135 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள், இதற்காக 951 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சீர்காழி தொகுதிக்கு 366 வாக்குப்பதிவு இயந்திரங்களும், மயிலாடுதுறை தொகுதிக்கு 365 வாக்குப்பதிவு இயந்திரங்களும், பூம்புகார் தொகுதியில் 410 வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த நிலையில், வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்து ஆயிரம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு உதவியுடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் இயந்திரங்கள் தேர்தலுக்கான உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
Hindusthan Samachar / ANANDHAN