தெலுங்கானா மாநிலத்தில் பிரைவெட் டிரைவருடன் இயக்கிய ஆர்.டி.சி. பஸ் லாரி மீது மோதி விபத்து – பலர் காயம்
தெலுங்கானா, 22 ஏப்ரல் (ஹி.ச.) தெலங்கானா மாநிலத்தில் ஆர்.டி.சி. ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மாற்று ஏற்பாடாக தனியார் டிரைவர்களுடன் வாடகை பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கரீம்நகரில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற ஆர்.
T


தெலுங்கானா, 22 ஏப்ரல் (ஹி.ச.)

தெலங்கானா மாநிலத்தில் ஆர்.டி.சி. ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மாற்று ஏற்பாடாக தனியார் டிரைவர்களுடன் வாடகை பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கரீம்நகரில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற ஆர்.டி.சி.

பஸ், கோதீராம்பூர் பைபாஸ் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து முன் சென்ற லாரியை மோதியது.

இந்த விபத்தில் பஸ்ஸின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

பஸ்ஸில் இருந்த பல பயணிகள் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில்,

பயிற்சி பெறாத தனியார் டிரைவர்களிடம் பஸ்கள் ஒப்படைக்கப்படுவதால் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன என குற்றம்சாட்டினர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA