Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 22 ஏப்ரல் (ஹி.ச.)
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், பெருந்தலைமன்னார் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 13 பேர், சுற்றுலாவிற்காக வால்பாறை சென்றிருந்தனர்.
வால்பாறையில் சுற்றுலா முடித்துவிட்டு கடந்த 17ஆம் தேதி மாலை பொள்ளாச்சி வழியாக கேரளா திரும்பிக் கொண்டிருந்தபோது,
வால்பாறை மலைப்பாதையில் உள்ள 13வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தடுப்புச் சுவரில் மோதி சுமார் 800 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து, கீழே உள்ள 9வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 13 பேரில், 7 பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் கடுமையாக காயமடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
பின்னர், அவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam