சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படும் மோடிக்கு எதிரான தேர்தல் இது - கே.சி.வேணு கோபால் விமர்சனம்
சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச) காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழ் கலாச்சாரம், சித்தாந்தம், மதசார்பின்மை ஆகியவற்றிக்கு எத
congress venugopal press meet


சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச)

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,

தமிழ் கலாச்சாரம், சித்தாந்தம், மதசார்பின்மை ஆகியவற்றிக்கு எதிராக, சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படும் மோடிக்கு எதிராக இந்த தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் அதிமுகவை கருவியாக பயன்படுத்தி, தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாஜ முயற்சிக்கிறது.

பாராளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை தமிழர்கள் அறிவார்கள்.

தமிழ்நாடு தொகுதிகளை குறைக்க முயற்சித்தார்கள். காங்கிரஸ், திமுக உள்பட எதிர்கட்சிகள் ஒன்றாக எதிர்த்தால் பாஜ அரசு கொண்டு வந்த மசோதா தோல்வி அடைந்தது.

ஆனால், மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக, எதிர்கட்சிகள் இருப்பதாக பொய்யான பிரசாரத்தை பாஜ கூட்டணி கட்சியினர் செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் மோடி வெற்றி பெற மாட்டார். காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

திமுக - காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக தேர்தல் பரப்புரை கூட்டங்களில் கலந்துகொண்டு பிரசாரம் செய்கின்றனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

பாராளுமன்ற கூட்டத்தொடரை திடீரென நடத்தியதால், ராகுல் காந்தி பிரசார சுற்றுப்பயணம் மாற்றப்பட்டது.

கூட்டணி வெற்றிக்காக ஒவ்வொரு தலைவர்களும், கடுமையாக பிரசாரம் செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b