தமிழகத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81% சதவீத வாக்குகள் பதிவு
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 17.69% வாக்கு பதிவாகிய இரு
56.81% of votes recorded


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 17.69% வாக்கு பதிவாகிய இருந்த நிலையில் 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் மொத்தமாக 37.56 சதவிகிதம் வாக்கு பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தற்போது பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 62.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 50.42% வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 54.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை விருகம்பாக்கத்தில் அதிகபட்சமாக 59.30% வாக்குகளும், குறைந்தபட்சமாக திருவிக நகரில் 48.74% வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b