தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 14.59 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள். த
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 14.59 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள்.

தமிழகம் முழுவதும் 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள், 71 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 33,211 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

இங்கு நுண்பார்வையாளர்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸார் அல்லது துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவரை 4,01,40,304 பேர் வாக்களித்துள்ளனர்.

சென்னையில் 68.13% வாக்குப் பதிவாகியுள்ளது.

அதிக பட்சமாக நாமக்கலில் 76.43% வாக்குப் பதிவாகியுள்ளது.

குறைந்த பட்சமாக கன்னியாகுமரி 61.95% வாக்குப் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 42 தொகுதிகளில் 60 சதவீதத்துக்கு மேல் வாக்குப் பதிவு தாண்டியது.

Hindusthan Samachar / vidya.b