தமிழக சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24% சதவீத வாக்குகள் பதிவு
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 82.24% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்
82.24% voter turnout recorded


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

மாலை 5 மணி நிலவரப்படி 82.24% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக கரூரில் 89.32% வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 73.44% வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 87.12% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 72.79% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இதுவரை 4.71 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.

இது 2021 தேர்தல் வாக்குப்பதிவை விட 19.18% அதிகமாகும்.

Hindusthan Samachar / vidya.b