ஆட்சி மாற்றம் உறுதி – அன்புமணி இராமதாஸ் நம்பிக்கை
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச) ஆட்சி மாற்றம் உறுதி என அன்புமணி இராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் அவரது அறிக்கையில், குறிப்பிட்டுள்ளதாவது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகி வரும் நிலையில், ஆட்சி மாற்ற
Anbumani


B


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச)

ஆட்சி மாற்றம் உறுதி என அன்புமணி இராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் அவரது அறிக்கையில், குறிப்பிட்டுள்ளதாவது

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகி வரும் நிலையில், ஆட்சி மாற்றம் உறுதியானதாகத் தெரிகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவது உறுதி என களத்திலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த தமிழக மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை 10 மாதங்களுக்கு முன் தொடங்கியபோதே, ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி அலை உருவாகி, அது தேர்தல் நேரத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்று கூறியிருந்தேன்.

அது தற்போது நிஜமாகி வருகிறது என்றார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கஞ்சா போதைப் பிரச்சினை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள், வேளாண் துறை வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, வரி மற்றும் கட்டண உயர்வு, விலைவாசி ஏற்றம், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் சீரழிவு போன்ற பல சவால்களை மக்கள் எதிர்கொண்டதாகவும் அவர் விமர்சித்தார்.

இந்த தேர்தல் மக்கள் விடுதலைக்கான தொடக்கமாக அமையும் என்றும், மே 4ஆம் தேதி முழுமையான வெற்றியை கொண்டாடுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டணி கட்சிகளுக்காக உழைத்த நிர்வாகிகளுக்கும், ஆதரவு வழங்கிய வாக்காளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ