ஏப்ரல் 23 - உங்கள் ஜனநாயகக் கடமை!
தமிழ்நாடு, 23 ஏப்ரல் (ஹி.ச.) ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக, மக்களைக் கொண்டு நடத்தப்படும் ஒரு ஆட்சிமுறை. இந்த,ஆட்சிமுறையில் வாக்களிப்பது என்பது ஒரு குடிமகனின் வெறும் உரிமை மட்டுமல்ல, அது சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக உயரிய கட
G


தமிழ்நாடு, 23 ஏப்ரல் (ஹி.ச.)

ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக, மக்களைக் கொண்டு நடத்தப்படும் ஒரு ஆட்சிமுறை.

இந்த,ஆட்சிமுறையில் வாக்களிப்பது என்பது ஒரு குடிமகனின் வெறும் உரிமை மட்டுமல்ல, அது சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக உயரிய கடமையாகும்.

உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம்: கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சாலை வசதிகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உங்கள் கையில் உள்ளது.

நீங்கள் வாக்களிக்கத் தவறும்போது, உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானிக்கும் வாய்ப்பை இழக்கிறீர்கள்.

மாற்றத்தின் தொடக்கப்புள்ளி: சமூகத்தில் நிலவும் குறைகளை நீக்கி, புதிய மாற்றங்களைக் கொண்டு வரவும், திறமையற்றவர்களை நீக்கி, தகுதிய பெட்டியிலிருந்துதான் தொடங்குகிறது.

உரிமைகளைப் பாதுகாக்கும் கேடயம்:

சட்டம் இயற்றும் இடத்தில் சரியான நபர்கள் அமர்ந்தால் மட்டுமே, தனிமனித சுதந்திரம், கருத்துரிமை மற்றும் சமூக நீதி பாதுகாக்கப்படும்.

உங்கள் உரிமைகளை மதிக்கும் அரசாங்கத்தை உருவாக்குவது உங்கள் வாக்குகள்தான்.

உங்கள் வாக்கு உங்கள் சக்தி!

தவறாமல் வாக்களிக்கவும்.

Hindusthan Samachar / Durai.J