Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 23 ஏப்ரல் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொக்கராயன் பேட்டை பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வாக்குச்சாவடி எண் 324-ல், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் ஆன ஈஸ்வரன் தனது முதல் வாக்கினை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நூறு சதவீத வாக்குப்பதிவு நடைபெறும் நாளில்தான் உண்மையான ஜனநாயகம் வலுப்பெறும். ‘நமது ஒரு வாக்கு முக்கியமில்லை’ என்று நினைப்பது தவறு. ஒவ்வொரு வாக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்களிக்காமல் இருப்பது தவறான நபர்கள் வெற்றி பெற வழிவகுக்கும் என்றார்.
மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முதலமைச்சர் கூறியபடி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam