குடும்ப ஆட்சிக்கும் கஞ்சா கலாச்சாரத்துக்கும் இத்தேர்தல் முடிவு கட்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலம் முழ
குடும்ப ஆட்சிக்கும் கஞ்சா கலாச்சாரத்துக்கும் இத்தேர்தல் முடிவு கட்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ராயபுரம் தொகுதி சென்னையின் முக்கியமான தேர்தல் களங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. முன்னாள் அமைச்சரான டி. ஜெயக்குமார் அதிமுக சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

தேர்தலையொட்டி, ராயபுரம் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் டி.ஜெயக்குமார் இன்று காலை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இன்று நாங்கள் எங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தினோம். இந்தத் தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமான தேர்தல். ஒரு குடும்பத்தின் ஆதிக்க அரசியலுக்கும், மாநிலத்தில் பரவி வரும் கஞ்சா கலாச்சாரத்துக்கும் இத்தேர்தல் முடிவு கட்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது.

மக்கள் அமைதியையும் பாதுகாப்பையும் எதிர்பார்க்கிறார்கள்.

அதை உறுதி செய்யும் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b