தேர்தலுக்கு நடுவே அதிரடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை..!
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.) சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல் மாத தொடகக்த்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந
தங்கம்


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)

சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

ஏப்ரல் மாத தொடகக்த்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது.

அந்த வகையில் நேற்று நிலவரப்படி எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.14,250 க்கும், ஒரு சவரன் ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து இன்று (ஏப்ரல் 23) மீண்டும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ14,160க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P