லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
மும்பை , 23 ஏப்ரல் (ஹி.ச.) இந்தியன் பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரின் 32-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதல
L


மும்பை , 23 ஏப்ரல் (ஹி.ச.)

இந்தியன் பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரின் 32-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்

ஜெய்ஸ்வால் 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டான நிலையில், மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 9 பந்துகளில் 43 ரன்கள் குவித்து அணியை நிலைநிறுத்தினார்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

160 ரன்கள் என்ற இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது.

தொடக்க வீரர் ஆயுஷ் படுனி ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.

தொடர்ந்து கேப்டன் ரிஷப் பேண்ட் மற்றும் மார்க்கம் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், மிட்செல் மார்ஷ் நிதானமாக விளையாடி 41 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.

ஆனால், மற்ற வீரர்கள் ஆதரவு தராததால் லக்னோ அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில், லக்னோ அணி 18 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் ராஜஸ்தான் அணியின் ஜோப்ரா ஆச்சர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

மேலும் பர்கர் மற்றும் சர்மா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவி பிஷோனி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA