Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், எனது சகோதர சகோதரிகள், குறிப்பாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து, தங்கள் பங்களிப்பின் மூலம் ஜனநாயக செயல்முறையை வலுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு தற்போது ஊழல் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் முனிவர்கள் வாழ்ந்த இந்த மண், தற்போது கலாச்சார அடையாள நெருக்கடியை எதிர்கொள்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு, வளர்ச்சியும் கலாச்சார முன்னேற்றமும் இணைந்து செயல்படுவதை உறுதி செய்யும் ஒரு அரசாங்கத்தை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஒவ்வொருவரும் தவறாமல் தங்கள் வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும். மற்றவர்களையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும் என ஜே.பி. நட்டா வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ