Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் நடைபெறவுள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு, வெளியூர் வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரளாக பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிகாலை 3 மணி முதல் காஞ்சிபுரம் செல்ல பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படாததால், ஆத்திரமடைந்த பயணிகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
அதே சமயம் ஆய்விற்காக அங்கு வந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்களின் வாகனத்தையும் மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேருந்து வசதி செய்து தருமாறு கோரி முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமைக்கு தீர்வு காண முயன்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam