Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 23 ஏப்ரல் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் பாகலகுண்டே போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அப்பகுதியில் வசித்து வருபவர் சரத்குமார்.
இவருக்கும் பிரியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சரத்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் முதலில் கிரிநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
அப்போது வீட்டின் அருகே சலூன் கடை நடத்தி வந்த பிரபுவுடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அந்த பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சரத்குமார் தனது மனைவியை கண்டித்தார்.
இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியை சமாதானப்படுத்தினர்.
அதன்பின் அவர்கள் பாகலகுண்டே பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.
ஆனால், பிரபுவுடன் இருந்த தொடர்பை பிரியா கைவிடவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், குப்பை கொட்டிவிட்டு வருவதாக கணவரிடம் கூறி பிரியா வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆனால் அவர் திரும்பி வரவில்லை.
மறுநாள் காலை மனைவி இல்லாததை கண்டு சரத்குமார் அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து விசாரணையில், 2 குழந்தைகளுக்கும் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டு, பிரியா தனது கள்ளக்காதலன் பிரபுவுடன் தப்பியோடியது தெரியவந்தது.
மேலும், கண்காணிப்பு கேமரா காட்சிகளில் குப்பை பை மற்றும் மற்றொரு பையுடன் பிரியா வெளியேறும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதுகுறித்து சரத்குமார் பாகலகுண்டே போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா மற்றும் பிரபுவை தேடி வருகின்றனர்.
தாய் இல்லாமல் தவித்து வரும் 2 குழந்தைகளின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA