Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள முனீஸ்வரன் பகுதியில், வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடியில் கத்தி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேலக்கோட்டை வாக்குச்சாவடி எண் 170-ல் இந்த சம்பவம் நடைபெற்றது.
பாலமுருகன் மற்றும் மாரிமுத்து ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாரிமுத்து வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தபோது, அவரை நோக்கி பாலமுருகன் திடீரென கத்தியை வீசியுள்ளார்.
ஆனால், அந்த கத்தி தவறுதலாக அருகில் வாக்களிக்க நின்றிருந்த அமிர்தவல்லி மீது பட்டு, அவரது காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தோர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவத்தை தொடர்ந்து வாக்குச்சாவடியில் பணியில் இருந்த போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலமுருகனை பிடித்து திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்திற்கு ஒப்படைத்தனர்.
அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் காரணமாக வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டன.
Hindusthan Samachar / GOKILA arumugam