Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் இன்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மாலை 3 மணி நிலவரப்படி மாவட்டத்தின் மொத்த வாக்குப்பதிவு 67.15 சதவீதமாக பதிவாகியுள்ளது.
தொகுதி வாரியாக பார்க்கும் போது,
மதுரை மத்திய தொகுதியில் 61.46%, மதுரை கிழக்கில் 66.46%, மதுரை வடக்கில் 60.83%, மதுரை தெற்கில் 65.52%, மதுரை மேற்கில் 65.80%, மேலூரில் 68.76%, சோழவந்தானில் 72.19%, திருமங்கலத்தில் 73.35%, திருப்பரங்குன்றத்தில் 68.06% மற்றும் உசிலம்பட்டியில் 68.42% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் அதிகபட்சமாக திருமங்கலம் தொகுதியில் 73.35% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
அதேவேளை குறைந்தபட்சமாக மதுரை வடக்கு தொகுதியில் 60.83% மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாலை நேரத்திலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருவதால், இறுதி வாக்குப்பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam