“ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்” – நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப்
Nainar


Nj


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

நான் ஒருவன் ஓட்டுப் போடவில்லை என்றால் என்ன ஆகிவிடும் என்ற எண்ணம் வேண்டாம்.

ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி கொண்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், முடியாட்சியில் இருந்து குடியாட்சிக்குத் தாவிய இந்தியாவில், ஒவ்வொரு ஓட்டுரிமைக்கும் பின்னாலும் பல லட்சம் மக்களின் தியாகங்களும் போராட்டங்களும் உள்ளன என்பதை நினைவில் கொண்டு, மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ