Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநிலத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 14,59,093 பேர் முதல் முறை வாக்காளர்கள் ஆகும்.
மொத்தம் 75,064 வாக்குச்சாவடி மையங்கள் 33,133 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் 83 ஆயிரம் காவலர்கள், 300 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அனைவரும் தங்களது வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி நடிகையும், பாஜக மாநில துணை தலைவருமான குஷ்பூ மற்றும் அவரது கணவரும், மதுரை மத்திய தொகுதி அதிமுக வேட்பாளர் சுந்தர்.சி தங்களது மகள்களுடன் வாக்களித்தனர்.
சென்னை மந்தைவெளி பகுதியில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்தனர்.
வாக்களித்த பிறகு நடிகை குஷ்பூ செய்தியாளர்களிடம் கையில் மை வைத்ததை காண்பித்தார்.
அதிமுக வேட்பாளரான சுந்தர்.சி பச்சை நிற உடையுடன் வந்து வாக்களித்தார்.
மேலும் ராயபுரம் அதிமுக வேட்பாளர் மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.
அவர் வாக்களித்து வெளியில் வந்த பிறகு குஷ்பூ மற்றும் ஜெயக்குமார் இருவரும் நலம் விசாரித்து கொண்டனர்.
பிரபல நடிகை குஷ்பூ பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த குஷ்பூ பின்னர் பாஜக மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி முதல் முறையாக புதிய நீதிக் கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
கடந்த 1995ஆம் ஆண்டு முறை மாமன் திரைப்படம் மூலம் இயக்குநராக திரை வாழ்க்கையை தொடங்கிய சுந்தர்.சி, தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, கலகலப்பு, அரண்மனை என பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் சுந்தர்.சி தலைநகரம், வீராப்பு உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN