சட்டமன்ற தேர்தல் -தனது வாக்கை பதிவு செய்தார் சீமான்
சென்னை , 23 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்த
N


சென்னை , 23 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை முதலே வாக்காளர்கள் தங்களது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான் தனது வாக்கை பதிவு செய்தார்.

அவருடன் அவரது மனைவியும் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஜனநாயக நாட்டில் கடைசி கருவி வாக்குதான். அதை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.

வாக்களிக்காமல் இருப்பதும் ஜனநாயகத்திற்கு துரோகம்.

ஒவ்வொரு வாக்கிலும் மாற்றம் வரும். அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA