Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:—
இன்று தமிழ்நாட்டுக்கு தனது விதியை மாற்றிக்கொள்ள ஒரு முக்கிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
தகுதி பெற்ற அனைத்து வாக்காளர்களும் பெருமளவில் திரண்டு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டின் பிரகாசமான மற்றும் மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்கும் வலிமையைக் கொண்டுள்ளது.
வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் செழிப்பிற்காக வாக்களியுங்கள். உங்கள் வாக்கை மதிப்புமிக்கதாக்குங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA