தமிழ்நாட்டில் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு – மாவட்ட வாரியான நிலவரம் வெளியீடு
தமிழ்நாடு, 23 ஏப்ரல் (ஹி.ச) தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில், மாலை 3 மணி நிலவரப்படி சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மாவட்ட வாரியான வாக்குப்பதிவு சதவீதத்தில் பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக கரூர்
வாக்குப்பதிவு


தமிழ்நாடு, 23 ஏப்ரல் (ஹி.ச)

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில், மாலை 3 மணி நிலவரப்படி சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

மாவட்ட வாரியான வாக்குப்பதிவு சதவீதத்தில் பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக கரூர் மாவட்டம் 76.08% வாக்குப்பதிவுடன் முன்னிலையில் உள்ளது. திருப்பூர் மாவட்டம் 75.38%, ஈரோடு மாவட்டம் 75.61%, தர்மபுரி மாவட்டம் 74.68% மற்றும் திண்டுக்கல் மாவட்டம் 74.35% ஆகிய மாவட்டங்களிலும் அதிக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

அதேவேளை திருவண்ணாமலை மாவட்டம் 72.19%, காஞ்சிபுரம் மாவட்டம் 72.51%, விழுப்புரம் மாவட்டம் 71.65%, வேலூர் மாவட்டம் 71.23%, திருச்சிராப்பள்ளி மாவட்டம் 71.05%, திருப்பத்தூர் மாவட்டம் 71.46%, கோயம்புத்தூர் மாவட்டம் 71.16% மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் 70.07% என மிதமான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

இதனுடன் விருதுநகர் மாவட்டம் 70.24%, நாகப்பட்டினம் மாவட்டம் 69.96%, செங்கல்பட்டு மாவட்டம் 69.46%, அரியலூர் மாவட்டம் 68.97%, திருவாரூர் மாவட்டம் 68.43%, திருவள்ளூர் மாவட்டம் 68.07%, சென்னை மாவட்டம் 68.13%, கடலூர் மாவட்டம் 68.53%, தேனி மாவட்டம் 67.68%, மதுரை மாவட்டம் 67.15%, தஞ்சாவூர் மாவட்டம் 66.65%, மயிலாடுதுறை மாவட்டம் 65.80%, தூத்துக்குடி மாவட்டம் 65.18%, நீலகிரி மாவட்டம் 63.67% மற்றும் திருநெல்வேலி மாவட்டம் 62.84% என குறைவான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் 61.95% வாக்குப்பதிவுடன் மாநிலத்தில் குறைந்த வாக்குப்பதிவு பதிவான மாவட்டமாக உள்ளது.

மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களித்து வருவதால், இறுதி வாக்குப்பதிவு சதவீதம் மேலும் உயரக்கூடும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam