வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் அவசரம் – ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த பெண் உயிர்தப்பினார்
திருப்பூர், 23 ஏப்ரல் (ஹி.ச.) சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற பொதுமக்கள் காரணமாக திருப்பூர் ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. பின்னலாடை நகரமான திருப்பூரில் பல லட்சம் வெளிமாவட்ட தொழிலாளர்கள்
ரயில்


திருப்பூர், 23 ஏப்ரல் (ஹி.ச.)

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற பொதுமக்கள் காரணமாக திருப்பூர் ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது.

பின்னலாடை நகரமான திருப்பூரில் பல லட்சம் வெளிமாவட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தேர்தல் நடைபெறுவதையொட்டி, அவர்கள் நேற்று மாலை முதலே குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினர். இதனால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பெரும் நெரிசல் காணப்பட்டது.

திருச்சி, மதுரை, சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அதிகமாக இருந்தனர்.

போதிய பேருந்து வசதி இல்லாததால் பலர் ரயில்களை நம்பியதால், இன்று காலை திருப்பூர் ரயில் நிலையத்தில் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் திரண்டது.

கோவையில் இருந்து சென்னை, திருப்பதி நோக்கி செல்லும் இன்டர்சிட்டி ரயில்களில் பயணிகள் கூட்ட நெரிசலில் முந்தி ஏறியும், படிகளில் நின்றபடியும் பயணம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், கோவையில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் திருப்பூர் நிலையத்தின் 2-ஆம் நடைமேடைக்கு வந்தபோது, ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர் தவறி தண்டவாளத்திற்குள் விழுந்தார்.

அதிர்ஷ்டவசமாக, அவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

தொடர்ந்து, சம்பவத்திற்குப் பிறகு அதே ரயிலில் மீண்டும் பயணம் செய்து வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

Hindusthan Samachar / GOKILA arumugam