Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.இன்று காலை 11 மணி நிலவரப்படி, மாவட்டத்தின் 8 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தமாக 38.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தொகுதிவாரியாக பார்க்கையில்,திருவண்ணாமலை – 38.52%,செங்கம் – 36.98%,கீழ்பெண்ணாத்தூர் – 38.34%,கலசப்பாக்கம் – 37.53%,போளூர் – 38.17%,ஆரணி – 39.22%,செய்யாறு – 39.71%,வந்தவாசி – 37.50% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
இதில், செய்யாறு மற்றும் ஆரணி தொகுதிகளில் அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
பிற்பகலில் வாக்குப்பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam