Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மாலை 3 மணி நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 72.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் 71.06% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
தொகுதி வாரியாக: செங்கம் – 70.87%, கீழ்பெண்ணாத்தூர் – 72.87%, கலசப்பாக்கம் – 72.22%, போளூர் – 71.92%, ஆரணி – 72.69%, செய்யாறு – 74.81%, வந்தவாசி – 71.10% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் அதிகபட்சமாக செய்யாறு தொகுதியில் 74.81% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. கீழ்பெண்ணாத்தூர் தொகுதியிலும் 72.87% வாக்குகள் பதிவாகி உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
மாலை நேரத்திலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால், இறுதி வாக்குப்பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam