“என் ஓட்டு வேறு யாரோ போட்டாங்க சார்!” – வாக்குச்சாவடியில் பெண் வாக்குவாதம்
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உமா மகேஷ்வரி என்ற பெண்மணி வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தபோது, அவரது பெயரில் ஏற
வாக்கு


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உமா மகேஷ்வரி என்ற பெண்மணி வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தபோது, அவரது பெயரில் ஏற்கனவே ஓட்டு பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், “என் ஓட்டை வேறு யாரோ போட்டுவிட்டார்கள்” என கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தான் நேரில் வந்து இருப்பதால் கண்டிப்பாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதால் அங்கு சில நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

பின்னர், சம்பவம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்து, தேர்தல் விதிமுறைகளின்படி அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இச்சம்பவத்தால் வாக்குச்சாவடி மையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P