முதல் ஆளாக சென்று ஜனநாயக கடமை ஆற்றிய நடிகர் அஜித்
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாநிலம் முழுவதும் காலை 7 மணிக்கு அமைதியாக தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் உற்சாகமாக வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இதற
அஜித்


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாநிலம் முழுவதும் காலை 7 மணிக்கு அமைதியாக தொடங்கியது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் உற்சாகமாக வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இதற்கிடையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் குமார் அதிகாலை நேரத்திலேயே வந்து வாக்களித்தார்.

காலை சுமார் 6.45 மணியளவில் அவர் வாக்குச்சாவடிக்கு வந்ததை அறிந்த ரசிகர்கள் திரளாக அங்கு கூடினர்.

அவரை ஒருமுறை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் அந்த பகுதி சில நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

அதே நேரத்தில், பொதுவாக வாக்களிக்க வந்த வாக்காளர்களும் அங்கு இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை கருத்தில் கொண்டு, தேர்தல் அதிகாரிகள் நடிகர் அஜித்திற்கு முன்னுரிமை வழங்கி, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வாக்களிக்க அனுமதி அளித்தனர்.

இதன்படி அவர் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.

நடிகர் அஜித் வழக்கம்போல் எளிமையாக வந்து வாக்களித்தது அவரது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இது ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P