Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து வாக்களித்தார்.
வாக்கு பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெறும் என்ற 100 சதவீத நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
மிகவும் கான்ஃபிடன்டாக உள்ளேன்.
தமிழக மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.
அதிக அளவில் மக்கள் வாக்களிப்பது நல்லாட்சிக்கான அடிப்படையாக இருக்கும்.
தேர்தல் அமைதியாக நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும், வாக்காளர்கள் உற்சாகமாக வந்து வாக்களித்து வருவது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறி என்றும் குறிப்பிட்டார்.
அதிமுகவின் வெற்றி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தலில் மக்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற உறுதியும் உள்ளதாக கூறினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P