Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
வாக்கு பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜனநாயகத் திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது.
அனைத்து வாக்காளர்களும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், பெண்களின் பங்கு அரசியலில் அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும், பெண்களின் குரல் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்றார்.
பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய Tamilisai Soundararajan, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் இந்த தேர்தலில் மக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை பயன் படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் அமைதியாக நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வாக்காளர்கள் உற்சாகமாக பங்கேற்பது நல்ல அறிகுறி என்றும் தெரிவித்தார்.
சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்கள் அதிகாலை முதலே திரண்டு வந்து வாக்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P