Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தனது ஜனநாயக கடமையை ஆற்றி வாக்களித்தார்.
அவர் தனது குடும்பத்தினருடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து, பொதுமக்களுடன் சேர்ந்து வரிசையில் நின்று காத்திருந்து வாக்காளர் விபரங்களை சரிபார்த்தார்.
அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தனது வாக்கை பதிவு செய்தார்.
வாக்குப்பதிவிற்குப் பிறகு, அவர் வாக்களித்ததற்கான அடையாளமாக புகைப்படம் எடுக்க செய்தியாளர்கள் கேட்டபோது,
ஒரு விரலை காட்டவா, இரண்டு விரலை காட்டவா, இல்லையென்றால் ஐந்து விரலை காட்டவா? என்று தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் கலகலப்பாக பேசி அங்கு இருந்தவர்களை சிரிக்க வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது துணைவியாரும் வாக்கு பதிவு செய்தார். பின்னர் இருவரும் இணைந்து புகைப்படங்களுக்கு போஸ் அளித்தனர்.
வாக்குச்சாவடி மையத்திலிருந்து வெளியே வந்தபோது செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பிய நிலையில்,
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நான் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டேன் என்று சுருக்கமாக பதிலளித்தார்.
அதற்கு மேல் எந்த அரசியல் கருத்துகளையும் தெரிவிக்காமல் அவர் வெளியேறினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P