பெருமளவில் திரண்டு வாக்களிக்க பிரதமர் மோடி கோரிக்கை
புதுடெல்லி, 23 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் உற்சாகமாக வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வ
மோடி


புதுடெல்லி, 23 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் உற்சாகமாக வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள இந்த முக்கிய தருணத்தில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் சாதனை அளவிலான வாக்குப்பதிவு நிகழ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமரின் இந்த அழைப்பு, தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P