Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்று பெருமளவில் வாக்களிக்க வேண்டும் என்று அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் சகோதர சகோதரிகள் அனைவரும் தங்கள் வாக்குரிமையைச் சரியாக பயன்படுத்தி, ஜனநாயகப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கியமான கருவியாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் கனவுகளையும் அபிலாஷைகளையும் நிறைவேற்ற உறுதியாக செயல்படும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் சுயநல அரசியலை முன்னிலைப்படுத்தும் ஆட்சியை அல்லாது, மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்ட ஆட்சியை உருவாக்க வாக்களிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அமைதியாகவும் ஒழுங்காகவும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும், வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்தத் தேர்தலில், அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ