Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச)
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் வாக்குரிமையை சிரமமின்றி பயன்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, சென்னையில் வசிக்கும் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக, அதிகளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட தகவலின்படி,
ஏப்ரல் 21, 2026 முதல் தொடங்கிய இந்த சிறப்பு சேவை இன்று (23.04.2026) காலை 10.00 மணி வரை தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் வழக்கமாக இயக்கப்படும் 4,812 பேருந்துகள் முழுமையாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், பயணிகள் கூட்டம் அதிகரித்ததை முன்னிட்டு கூடுதலாக 5,502 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மொத்தம் 10,314 பேருந்துகள் இயக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாகவும் சுலபமாகவும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பேருந்து நிலையங்களில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், வழிகாட்டும் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், தேர்தல் நாளை முன்னிட்டு பயணிகள் திரளுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுவதாகவும், எந்த பயணிக்கும் சிரமம் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் மூலம், மக்கள் அதிகளவில் வாக்களிப்பில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ